சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலளிக்கு 20 ஆண்டு சிறை
ஏரியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த அவருக்கு 20 ஆண்டு சிறை மற்றும் 25000 அவரது விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-07 11:27 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் கிராமத்தில் 7 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முருகேசன் உள்ளவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் ஏரியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஏரியூர் காவல்துறையினர் போக்சோ வழக்கின் கீழ் முருகேசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இது குறித்த வழக்கு விசாரணைக்கு நேற்று தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது முருகேசன் சிறுமியை பாலியல் தொல்லை தந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டது.
அடுத்து முருகேசனுக்கு 20 வருடம் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் போஸ்கோ நீதிமன்ற நீதிபதி சையத் பர்க்கதுல்லா அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.