சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு சிறை
சலவை தொழிலாளி 13 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துளளர் இதனையடுத்து அவருக்கு சிறை தண்டனை அளிக்கபட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-01-31 09:08 GMT
சேலம் ரெட்டியூர் நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 46), சலவை தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக செல்வத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.