பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பணியாளர் மீது வழக்குப் பதிவு
கோவில்பட்டியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு மருத்துவமனை பணியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 15:00 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பால்வினை நோய் பிரிவில் ஆலோசகராக பணியாற்றுபவர் ஸ்டீபன். இவர் சம்பவத்தன்று இங்கு பரிசோதனை மேற்கொள்ள வந்த இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண்,
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக ஸ்டீபன் மீது கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.