பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-08 04:09 GMT

பெரம்பலூரில்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஏப்ரல் ஆறாம் தேதி சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஈசன் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது இதில் திரளானபக்தர்கள் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்,

இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது பூஜைகளை கௌரிசங்கர் சிவாச்சாரியார் மற்றும் முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தனர் இந்நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலர் குழு வைத்தீஸ்வரன், மற்றும் ரமேஷ், திருஞானம், சிவக்குமார், உள்ளிட்ட வார வழிபாட்டு குழுவினர் மற்றும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் இதேபோல் பெரம்பலூர் நகர் செக்கடி தெருவில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுகந்த குசலாம்பிகை உடனுறை காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மகாதீபாரதனை விமர்சையாக நடைபெற்றது, இதில் அப்பகுதியில் உள்ள திரளான பக்தர்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதற்கான பூஜைகளை செல்லப்பா சிவாச்சாரியார் செய்து வைத்தார்.

Tags:    

Similar News