கடையின் பூட்டை உடைத்து டிவி, ஹோம் தியேட்டர்கள் திருட்டு

தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து டிவி, ஹோம் தியேட்டர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ;

Update: 2023-12-26 04:23 GMT

திருட்டு 

தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் வசிப்பவர் மாரியப்பன் மகன் செந்தாமரை கண்ணன் (40), இவர் புதிய பஸ் நிலையம் அருகில் போல்பேட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 22 ஆம் தேதி கடையை பூட்டி விட்டு சென்றவர். நேற்று கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 7 டிவிகள், ஒரு பெரிய ஹோம் தியேட்டர், 17 சிறிய ஹோம் தியேட்டர் ஆகியவை திருடுபோயிருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும் இது குறித்து செந்தாமரைக் கண்ணன் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News