புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’
நவாப்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக்கடையில் தடைசெய்யப் பட்ட புகையிலை விற்கப்பட்டதால் அதற்கு சீல் விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-03-23 02:50 GMT
திருச்சி உறையூர் நவாப்தோட் டம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடைசெய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த தோடு, அபராதமும் விதித்தனர்.
இதனைதொடர்ந்து அந்த கடையில் தொடர்ச்சியாக புகையிலை பொருட்கள் விற்ப தாக வந்த தகவலையடுத்து, நேற்று மாலை மீண்டும் கடையில்சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறையினர் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது.