திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 11:14 GMT
கோப்பு படம்
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது. திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.