புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கடந்த 31-ந் தேதி கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-03 01:19 GMT

பைல் படம்

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 33). இவர் கடந்த வாரம் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் அவரை தாக்கி மோட்டார் சைக்கிள், பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பாஸ் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். ஆனால் அவரது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், அப்பாஸ் கொடுத்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கடந்த 31-ந் தேதி கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீஸ் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் சுல்தான் (42), இம்தியாஸ்கான் (34), முஸ்தபா (45), சாகுல்ஹமீது உள்பட 30 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News