சத்துணவுக்கூடத்தை சூறையாடிய ஒற்றை காட்டு யானை

பந்தலூர் அருகே சத்துணவுக்கூடத்தை ஒற்றை காட்டு யானை சூறையாடியது.

Update: 2023-10-29 12:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இன்று பள்ளி வளாகத்திற்கு வந்த ஒற்றையானை, அங்கிருந்த சத்துணவு கூட கதவை உடைத்து, உள்ளே வைத்திருந்த அரிசி மூட்டையை எடுத்து சென்றது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, யானையை வனத்திற்குள் விரட்டினர்.

கடந்த வாரம் ஏலமன்னா பகுதியில், ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டையை தூக்கிச் சென்ற யானை, தற்போது சத்துணவு கூடத்தை உடைத்து அரிசி மூட்டையை எடுத்துச் சென்றுள்ளது. கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே தொடர்ச்சியாக உணவு பொருட்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினரை வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News