சீர்காழி: சுனாமி நினைவு தின பேரணி
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தின பேரணி நடைபெற்றது.
Update: 2023-12-26 05:08 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல்,பழையார்,தொடுவாய்,கூழையார்,கொட்டாயமேடு,பூம்புகார்,வாணகிரி உள்ளிட்ட 20 மீனவர் கிராமத்தில் 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆழி பேரலையின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் நினைவு தூணுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர் முன்னதாக திருமுல்லைவாசல் கடைவீதியிலிருந்து மலர் வலையத்துடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் மீனவர்கள் பேரணி நடைபெற்றது