சிறுதானிய உணவகம் ஊட்டியில் இன்று திறப்பு!

சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டியில் சிறுதானிய உணவு அங்காடியை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று திறந்து வைத்தார்.

Update: 2024-03-02 07:06 GMT
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் சிறுதானிய உணவு அங்காடி ஊட்டியில் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதானிய உணவு அங்காடியை திறக்க வேண்டும் என அறிவுருத்தியிருந்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் "பூ மாலை" வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 4.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுதானிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. உணவு அங்காடியை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அருணா பேசுகையில், " தற்போதைய காலக் கட்டத்தில் சிறுதானிய உணவுகள் குறித்து கிராமப்புறங்களிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பீட்சா, பர்கர் போன்ற உணவுகளின் வருகையால் சிறு தானிய உணவுகளான கம்பு, திணை, கேழ்வரகு, களி உள்ளிட்ட நமது பாரம்பரிய உணவுகள் அழியும் தருவாயில் உள்ளது. அதனை மீட்டெடுக்கும் வகையில், மக்களுக்கு சிறுதானிய உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இன்று ஊட்டியில் சிறு தானிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது," என்றார்.
Tags:    

Similar News