சித்தேரியை துார்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

சித்தேரியை ஆய்வு செய்து, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2024-05-27 15:13 GMT

சித்தேரியை ஆய்வு செய்து, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


சித்தாமூர் அருகே மருவளம் கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் வாயிலாக, 200 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. ஏரியில் இருந்து, இரண்டு மதகுகள் வாயிலாக, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. மேலும், ஏரி நடுவே கிராமத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யும் கிணறு உள்ளது.

இந்த ஏரி, கடந்த 40 ஆண்டுகளாக துார் வாரி சீரமைக்கப்படாததால், கோடைக் காலத்தில் வறண்டு, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.பருவமழைக்கு இன்னும், ஆறு மாதங்கள் உள்ள நிலையில், ஏரி தற்போது வறண்டு போய் உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், மருவளம் கிராமத்தில் உள்ள சித்தேரியை ஆய்வு செய்து, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News