மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்ட பந்தயம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.;
Update: 2024-03-08 09:48 GMT
மகளிர் தினத்தை ஒட்டி மாரத்தான் போட்டி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே பையூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
ஹார்ட்புல்னஸ் நிறுவனம் மற்றும் PSY பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மகளிருக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியானது வேலுநாச்சியார் மணி மண்டபத்தில் துவங்கி அரண்மனை வாசலில் நிறைவு பெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்