பிரமாண்டமாக நடைபெற்ற தி நவோதயா அகாடமி பள்ளி ஆண்டு விழா... Mr.S.மோகனசுந்தரம் பங்கேற்று உரை!!
நாமக்கல் தி நவோதயா அகாடமி பள்ளியின் 16வது ஆண்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 16 ஆண்டுகளாக தி நவோதயா அகாடமி - சிபிஎஸ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. பிரமாண்டமான வசதிகளுடன் இயங்கும் இந்த பள்ளியில் அகாடமி அளவில் நல்ல மதிப்பெண்களை பெற்று மாணவர்களை திறமையானவர்களாக உருவாக்கும் மகத்தான பணியை செய்து வருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் அளவுக்கு உருவாக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் தி நவோதயா அகாடமி பள்ளி 16வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக பள்ளியில் 16வது ஆண்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி நடத்தப்பட ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராக நடிகரும், நகைச்சுவை நாவலருமான Mr.S. மோகனசுந்தரம் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக சிபிஎஸ்சி அகாடமியின் முன்னாள் இயக்குநர் Mr.D.T. சுதர்ஷன் ராவ் பங்கேற்றார்.
பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையும், விருந்தினர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் அமரும் அளவுக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்த தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களை பெருமைப்படுத்தி கிளாசிக் நீட் அகாடமி நிறுவனர் Dr.T. பெரியசாமி வரவேற்றார். அதன்பின்னர், பசுமைப்புரட்சியை போற்றும்விதமாக பள்ளி வளாகத்தில் விருந்தினர்களின் கைகளால் மரங்கள் நடப்பட்டன.
பொருளாளர் தேனருவி வரவேற்புரை வழங்க, முதல்வர் ஆண்டெனிராஜ் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் விருந்தினர்கள் தங்கள் இருக்கைகளில் அமர, அவர்களை சிறப்பித்து கிளாசிக் நீட் அகாடமி நிறுவனர் Dr.T. பெரியசாமி பேசினார். அதை தொடர்ந்து மாணவ செல்வங்களின் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின. மழலைகளின் கொஞ்சல் நடங்களும், மாணவ, மாணவிகளின் திறமையை பறைச்சாற்றும் நடனங்களும் பார்ப்போரின் மனதை கொள்ளையடித்தன. பெற்றோர்கள் சிரமப்படாமல் இருக்க பள்ளியின் ஆசிரியர்களின் கண்காணிப்பு இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து விழா மேடையில் மாணவர்களின் நடன நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக, கிராஃபிக்ஸ் எஃபெக்ட் மற்றும் பிஜிஎம் கொடுத்து ஆண்டு விழா நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
விழா இரவு நேரத்தை நெருங்கியதும், பெற்றோர் மற்றும் மாணவர்களின் தேவை உணர்ந்து அவர்களுக்கு இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவின் இறுதியாக பள்ளியின் சிறந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஒவ்வொருவரையும் சிறப்பித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இடையில் கடந்த 16 ஆண்டுகளில் தி நவோதயா அகாடமி பள்ளி கல்வித்துறையில் செய்திருக்கும் சாதனைகள் பெற்றோர்களுக்கு பட்டியலிடப்பட்டு எடுத்துரைக்கப்பட்டன.
விழாவின் ஒரு பகுதியாக தலைமை விருந்தினராக வந்த நகைச்சுவை நாவலர் Mr.S.மோகன சுந்தரம், நகைச்சுவை உணர்வுடன் பேசி கல்வியின் முக்கியத்துவத்தையும், மாணவர்களின் நலனின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பையும், கல்விக்காக தி நவோதயா அகாடமி மேற்கொண்டு வரும் பணிகளையும் எடுத்துரைத்து பேசினார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் Mrs.சரஸ்வதி தர்மலிங்கம், செயலாளர் Mr.A.M.தனபால், பொருளாளர் Mr.K.தேனருவி, முதல்வர் Mr.A.ஆண்டனி ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று அனைவருக்கும் வாழ்த்துரை தெரிவித்தனர். ஆண்டு விழாவின் தொடக்கம் முதல் இறுதி வரை ஓவ்வொரு நிகழ்வும் நன்றாக நடைபெற்று பெற்றோரின் வாழ்த்துகளை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளின் புகைபடங்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.