ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு திறன் பயிற்சி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-01-06 07:22 GMT
தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் ப்ரொடக்சன் டெக்னாலஜி ,எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சார்ந்தவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவாரூர் நாகை பைபாஸ் சாலை அரசு பஜாஜ் ஷோரூம் அருகில் உள்ள தாட்கோ மாவட்டம் மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.