வேலூரில் தெருநாய்களுக்கு பரவும் தோல் நோய்
வேலூரில் தெருநாய்களுக்கு தோல் நோய் பரவுவதால் வீடுகளில் உள்ள நாய்களை கவனிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 12:11 GMT
வேலூரில் தெருநாய்களை தோல் நோய் தாக்கி வருகிறது. இதனால் வேலூரில் திரியும் பல தெருநாய்களின் முடிகள் உதிர்ந்து, ஆங்காங்கே புண்கள் ஏற்பட்டு பார்ப் பதற்கே அருவருப்பாக காட்சி அளிக்கிறது. திடீரென அந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவர்களிடம் கேட்டபோது, தெருநாய்களை தாக்கும் தோல்நோயால் நாய்களின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. ஆனால் இந்த நாய்கள் மூலம் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே வீடுகளில் வளர்க்கும் நாய்களை அடிக்கடி கவனிக்க வேண்டும்.
தோல்களில் மாற்றம் ஏதும் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.