தேர்தலை புறக்கணிப்பதாக சிறு விசைதறி ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

சாயதொழிற்சாலை பிரச்னைக்கு தீர்வு காண உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே ஆதரவு அளிப்பதாகவும், இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்பதாகவும் சிறு விசைதறி ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் தெரிவித்தனர்.

Update: 2024-04-11 13:10 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முடிவில் தற்பொழுது விசைத்தறி தொழில் மிகவும் நலிவு அடைந்த சூழ்நிலையில் அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு தேவைப்படும் சாய தொழிற்சாலைகளை முடியதாலும் தற்பொழுது விசைத்தறி ஜவுளி உற்பத்தி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் தமிழகத்தில் காட்டன் உற்பத்தி அதிகம் இருந்த சூழ்நிலையில் தற்பொழுது பாலியஸ்டர் வகை நூல்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது இதனால் விசைத்தறி தொழில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதியில் குறைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக விசைத்தறியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விசைத்தறிகளும் எடை போட்டு விற்கும் சூழ்நிலைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் இது தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த சாய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் தற்போதைய தமிழக அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய துறை அமைச்சர் மைய நாதன் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டிய இடத்தை நேரில் ஆய்வு செய்து தங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பி உள்ளனர் .

மத்திய அரசு இதற்கான ஏற்பாடுகள் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது எனவே குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசிடம் சொல்லி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்த வேண்டும் அவ்வாறு வலியுறுத்துவேன் என உறுதி அளிக்கும் வேட்பாளருக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சாயத்த தொழிற்சாலை உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும் அவ்வாறு உறுதி அளிக்க முடியாத பட்சத்தில் தேர்தலை ஜவுளி உற்பத்தியாளர்களும் சாயத் தொழிற்சாலை உரிமையாளர்களும் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags:    

Similar News