22 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 5 பேர் கைது
காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப்பில் அத்துமீறி கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, 5 பேரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
22 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்திய 5 பேர் கைது. உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை அதிரடி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப்பில் சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22, 600 கிலோ, ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதை அடுத்து லாரி மற்றும் ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் லாரியின் பின்னால் காரில் வந்த விருதுநகர் மாவட்டம், வெள்ளியம்பாளயத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (48) காரிமங்கலத்தை சேர்ந்த சேட்டு (28) கமுதியை சேர்ந்த சுதாகர் (34) கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை நாகராஜ் (58) ஓமலூர் ராமச்சந்திரன் (28) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.