கும்பகோணத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பு

கும்பகோணத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2024-05-22 13:25 GMT

அலுவலகத்தில் நிழைந்த பாம்பு 

கும்பகோணம் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நகர நிலவரி திட்ட அலுவலகம் (தனி தாசில்தார்) இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் நிலம் அளவை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம் அலுவலகத்துக்குள் ஆறடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்தது. வாசல் பகுதியில் அந்த பாம்பு ஊர்ந்து வந்ததை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வருவதற்குள் அருகில் இருந்த புதருக்குள் பாம்பு பதுங்கிக் கொண்டது.

அலுவலகத்துக்குள் பாம்பு புகுந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ,அரசு அலுவலகத்திற்குள் பாம்பு வந்தது அதிர்ச்சியாக உள்ளதாகவும், இந்த அலுவலகத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றி அலுவலக பகுதியை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags:    

Similar News