பனிபொழிவால் முல்லைப்பூ மகசூல் பாதிப்பு - விவசாயிகள் கவலை

வேதாரண்யத்தில் பனிப்பொழிவால் முல்லைப்பூ செடிகள் பாதிக்கப்பட்டு பூக்கள் மகசூல் பெருமளவில் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2024-01-22 08:46 GMT

முல்லை பூ சாகுபடி 

பனிப் பொழிவால் முல்லைப்பூ செடிகள் பாதிக்கப்பட்டு பூக்கள் மகசூல் பெருமள வில் குறைந்ததால் விவசா யிகள் கவலையடைந்துள்ள னர் . பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்களுக்கு கடும் கிராக்கி இருக்கும். இதனால் இவற்றின் விலை எக்கச்சக்க மாக உயர்வது வழக்கம். இதற்கு காரணம் இந்த மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் பூக்களின் மகசூல் குறையும். இதனால் பற்றாக்குறை அதிகரித்து விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.5 ஆயிரம் வரை ஏலம் போகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் வெளியூர்களுக்கு அனுப்பப்படும். இதற்குப்பின் நவம்பர் முதல் பிப்ரவரி வரை மகசூல் சற்று குறையும். ஆனால் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவால் முல்லைப் பூ செடிகள் பாதிக்கப்பட்டு மகசூல் பெருமளவு குறைந்து விட்டது. இதனால் தினமும் ஒரு டன் பூ கூட அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதையடுத்து இந்த சாகுபடியை நம்பியுள்ள சுமார் பத்தாயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News