உலக மண்வள தினம் - விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மண் மற்றும் நீர் வாழ்வின் ஆதாரம் உலக மண்வள தினத்தில் வேளாண்மை அலுவலர் விவசாயிகளிடையே உரையாற்றினார்

Update: 2023-12-08 02:33 GMT

உலக மண் தினம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாரத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் வெம்பாக்கம் மற்றும் சித்தத்தூர் ஆகிய இரண்டு கிராமங்களில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ம. சண்முகம் அவர்களின் ஆலோசனையின்படி வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி தலைமை தாங்கினார் .

துணை வேளாண்மை அலுவலர் ரா. சுப்ரமணியம் முன்னிலை வைத்தார்.உதவி வேளாண்மை அலுவலர் தங்கராசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் எஸ் நடராஜன் எஸ் பத்மஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர். உலக மண்வள தின விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெம்பாக்கம் வட்டார வேளாண்மை அலுவலர் சு. ரேணுகாதேவி விவசாயிகளிடையே பேசுகையில் உலக மண்வள தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 5 ஆம் தேதி மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மண்ணின் முக்கியத்துவத்தை பாதுகாக்கவும் மண் மீது விவசாயிகளாகிய நாம் கவனம் செலுத்தவும் மண் வளங்களை நிலையான மேலாண்மைக்கு வாதிடுவதற்கும் ஒரு வழிமுறையாக மண் வள தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO )ஆனது உலகளாவிய மண் வள தினத்தை டிசம்பர் 5, 2014 முதல் அதிகாரப்பூர்வ உலக அறிக்கையாக வெளியிட்டது. உலக மண்வள தினம் டிசம்பர் 5 2023 இதன் கருப்பொருள் மண் மற்றும் நீர் வாழ்வின் ஆதாரம். குளோபல் வார்மிங் போன்று சாயில் வார்மிங் என்ற பிரச்சனையும் விவசாயிகளுக்கு இருக்கிறது அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலம் நமக்கு கிடைப்பதில்லை செயற்கை உரங்களை பயன்படுத்தி நாம் விவசாயம் செய்வதால் மீண்டும் அந்த மண்ணை பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்லும் நிலையில் இருக்கிறோம்.

2050 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்ட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் . இருக்கின்ற வளங்களை சேதாரம் இன்றி பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படையில் மண்வளம் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. மண்வள தினத்தில் மண்ணின் தன்மை என்பது நிலையான மற்றும் மேல் தன்மை கொண்ட வேளாண் உணவு முறைகளை அடைவதில் மண்ணுக்கும் நீருக்கும் இடையே உள்ள முக்கியத்துவம் மற்றும் உறவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டது .

உலக மண்வள தினம் என்பது ஒரு தனித்துவமான உலகளாவிய தளமாகும் இது மண்ணை கொண்டாடுவது மட்டுமல்லாமல் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலகெங்கிளும் உள்ள குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது .விவசாயிகளாகிய நமக்கு நமது உணவு உற்பத்திக்கு மண் மற்றும் நீர் என்னும் இந்த இரண்டும் அடிப்படை. தாவரங்களால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு முக்கியமான மண் நீர் நமது சுற்றுப்புற சூழல் அமைப்புகளை ஒன்றாக இணைக்கிறது. இந்த கூட்டுவாழ் உறவு தான் நமது விவசாய அமைப்புகளின் அடித்தளமாகும் குறைந்தபட்ச கரிம பொருட்களை சேர்ப்பது, மூடி பயிர் செய்தல், பயிர் சுழற்சி ,மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அரிப்பு மற்றும் மாசுபாட்டை குறைத்தல், நீர் ஊடுருவல் மற்றும் சேமிப்பு மேம்படுத்துதல் போன்ற நிலையான மண் மேலாண்மை நடைமுறைகளை விவசாயிகளாகிய நாம் கடைபிடித்து மண்ணின் பல்லுயிர் தன்மையை பாதுகாக்க வேண்டும் இதனால் மண்ணின் வளம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் மண் கரிம சேர்மங்களை தன்னகத்தே உள்ளடக்கவும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்க முடியும்‌ என்று கூறினார்.

இதனால் விவசாயிகள் அனைவரும் மண் வளத்தை பாதுகாக்கவும் மண் பரிசோதனை திருவண்ணாமலை நீர் மற்றும் மண் பரிசோதனை ஆய்வகத்தை அணுகியும் மற்றும் கீழாநெல்லி வேளாண்மை அறிவியல் நிலையத்திலும் மண் பரிசோதனைசெய்து கொள்ளவும் விவசாயிகளிடையே வலியுறுத்தினார் . துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியம் விவசாயிகளிடையே பேசுகையில் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கரிம வளங்கள் வெவ்வேறு வேளாண் பயிர்களுக்கான மண் எடுக்கும் முறை மற்றும் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை அடிப்படையில் உரம் இடுவதால் வரக்கூடிய நன்மைகள் ஆகியவற்றை பற்றி விவசாயிகளிடையே எடுத்து கூறினார்.

அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் பத்மஸ்ரீ பேசுகையில் பயிர் நிலம் ஒன்றில் ஏக்கர் ஒன்றில் 1.4 டன் மண்புழுக்கள் வாழ்வதுடன் அப்பழுக்கள் ஆண்டு ஒன்றுக்கு 15 டன் அளவிற்கு செரிவான மண்ணை உருவாக்குகின்றன ஆதலால் நாம் மண்ணை பாதுகாக்க வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரிப்பினை குறைத்து இயற்கை முறையில் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடையே கேட்டுக் கொண்டார்.

உதவி வேளாண்மை அலுவலர் தங்கராசு விவசாயிகளிடையேபேசுகையில் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதற்காக மிதமான உழவு ,பயிர் சுழற்சி, இயற்கை எருக்களை இடுதல் ,உயிர் உரங்கள் மற்றும் பசுந்தால் உரங்களை உபயோகித்தல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முதலியவற்றை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். உதவி தொழில் நுட்ப மேலாளர் நடராஜன் ரசாயன உரங்கள் வீரியமிக்க கலைக்கொல்லிகள் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகள், களைக் கொல்லிகள் தவிர்த்து ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு மண் வள தினத்தை ஒட்டி நன்றி நல்கினார்.

Tags:    

Similar News