தாயை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூர மகன் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாயுடன் ஏற்பட்ட தகராற்றால் அவரை உயிருடன் எரித்து கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-27 11:35 GMT
கைதான மோசஸ்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரளா எல்லையில் வெள்ளறடை பகுதி காற்றாடி என்ற இடத்தை சேர்ந்தவர் நளினி (60). இவரது மகன் மோசஸ். வேலைக்கு சரிவர செல்லாமல் மது மற்றும் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார். மேலும் பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் மோசஸ் மீது போக்சோ உட்பட பல கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை மோசஸ் திடீரென தனது தாயாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தாய் என்ன பாராமல் போதையில் நளினியை வீட்டுக்குள் கட்டி போட்டு உயிருடன் தீ வைத்தார்.

Advertisement

உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் நளினி கூச்சலிட்டர். நளினியின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியினர் அவர் வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அவர் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெள்ளறடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து நளினின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோசஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News