தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தூத்துக்குடியில் தாய் இறந்த மன வேதனையில் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-21 10:03 GMT

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தூத்துக்குடி, அய்யனடைப்பு பாரதி நகரைச் சேர்ந்தவர் சங்கர் மகன் செல்வகுமார் (45). இவரது தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டாராம். இதனால் மனவேதனையில் இருந்த செல்வக்குமார் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News