மயிலாடுதுறை : கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு. ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

Update: 2023-12-23 08:38 GMT

சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் ,பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரத்தில் ஓர் அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி கொடுத்த இடமாகும். சனி கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பதால் ,இவ்வூர் கோடிஹத்தி பாப விமோசன தலம், என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கோழிகுத்தி என தற்போது அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில், இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி பரமபத வாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மூலவர் வானமுட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News