உலக பூமி தினத்தை முன்னிட்டு எஸ்பி மரக்கன்றுகள் நடல்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தென்னை மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள்.

Update: 2024-04-24 02:52 GMT

மரக்கன்று நட்ட எஸ்பி

மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தென்னை மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள்.* சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பபின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 100 தென்னை மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இன்று தலைமையேற்று தொடங்கி வைத்தார்கள்.

Tags:    

Similar News