பேரூரணியில் காவலர் பயிற்சிப் பள்ளியில் எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி காவலர்களுக்கான இறுதித் தேர்வை பயிற்சி பாலாஜி சரவணன் எஸ்.பி   ஆய்வு;

Update: 2023-12-13 05:42 GMT

தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களுக்கான இறுதித் தேர்வை பயிற்சி பாலாஜி சரவணன் எஸ்.பி   ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு இன்று துவங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி சட்டவகுப்பிற்கான முதல் நாள் தேர்வை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர்  மாரிராஜன்  முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  இன்று நேரில் சென்று மேற்பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  சகாய ஜோஸ், திருநெல்வேலி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News