சிறப்பு கிராம சபை கூட்டம்

தருமபுரியிலுள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2024-07-02 02:39 GMT

  தருமபுரியிலுள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது. 

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநர் அறிவுரைகள்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (02.07.2024) காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொது மக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாளை 02.07.2024 -  செவ்வாய் தினத்தன்று நடத்தப்பெற வேண்டிய சிறப்பு கிராமச்சபை கூட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்,கலைஞரின் கனவு இல்லம்” 2024-25 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் வீடு வழங்க பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் குறித்து விவாதித்தல் (அரசாணை எண்.70-இல் வ.எண்.3 (VII) -இல் உள்ளவர்கள்) பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல் 2024-25 ஆம் ஆண்டு திட்டத்தின்கீழ் (ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை வீடுகள் மட்டும்) பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் குறித்து விவாதித்தல், இவ்வாறு மாவட்ட ஆட்சிதலைவர் கி.சாந்தி,இ.ஆ.ப., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News