தமிழ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

Update: 2024-02-27 07:01 GMT
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் உரை

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறையில்  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளையின் சார்பாக சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இவ்விழாவில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் இலக்கியத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் ஜெ.தேவி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வி.திருவள்ளுவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பல்கலைக் கழகத்தின் பதிவாளர்(பொ) பேராசிரியர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை மற்றும் மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் முனைவர் ச.கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்விற்குச் சிறப்புச் சொற்பொழிவாளராக அழைக்கப்பட்ட புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி அவர்கள், ஆதித்தனாரும் அருந்தமிழும் என்னும் தலைப்பில் வழங்கிய உரையில் ஆதித்தனாரின் இதழ் பணி மற்றும் தமிழ் வளர்ப்பு பற்றி விரிவாகப் பேசினார். மற்றொரு சிறப்புச் சொற்பொழிவாளரான திருச்சி, உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் விஜயசுந்தரி அவர்கள், அன்றைய தந்தியும் இன்றைய அலைபேசியும் என்னும் தலைப்பிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு சொற்பொழிவு வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.தனலெட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வன் ச.வாசுதேவன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News