பாப்பிரெட்டிப்பட்டி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

தர்மபுரி மாவட்டம் , தென்கரைக்கோட்டையில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் நடைப்பெற்ற சித்திரை பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-22 03:03 GMT

பிரதோஷ வழிபாடு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இன்றைய தினம் வரும் சாமிக்கு மூன்று கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் சித்திரை மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு நேற்று (ஏப்.21) வழிபாட்டு குழு சார்பில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது இந்த நிகழ்வில் நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News