சிவகுருநாதர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை
சமூக சேவகரும், தொழிலதிபருமான எஸ்.வி. கணேசன் பிறந்த தினத்தை முன்னிட்டு சுரண்டை அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள், சிவகுருநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
Update: 2024-04-29 03:06 GMT
சிறப்பு பூஜை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை சிவகுருநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சிவகுருநாதர் திருக்கோவிலில் சிறந்த சமூக சேவகரும், தொழிலதிபருமான எஸ்.வி. கணேசன் பிறந்த தினத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை பூஜையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து கோடை விடுமுறை சமய வகுப்பு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமானூர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.