சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை

சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைஉயில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2024-03-06 06:38 GMT

சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிறுகடம்பூரில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 6-ம் ஆண்டு கும்பாபி ஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. இதை யொட்டி முனீஸ்வரனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமமக் கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News