ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சேலத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சேலத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-01-23 13:01 GMT

சிறப்பு பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அங்கு பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். கோவிலுக்கு சிறுவன் ஒருவன் ராமர் வேடமணிந்து வந்தது பக்தர்களை கவர்ந்தது.

மேலும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்கு அமைக்கப்பட்ட அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதேபோல் சேலம் பட்டைக்கோவில் பகுதியில் உள்ள பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் அங்கு அகன்ற திரையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

இதேபோல் மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News