போதமலைக்கு சாலைப்பணிக்கு பாஜகவினா் சிறப்பு பூஜை

போதமலை சாலைப்பணிக்கு பாஜகவினா் சிறப்பு பூஜை செய்தனர்.

Update: 2024-02-09 16:04 GMT

சிறப்பு பூஜை செய்த பாஜகவினர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்தில் போதமலை பகுதிக்கு சாலை அமைக்கும் பணியானது மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ. 118 கோடி, மாநில அரசு ரூ. 22 கோடி திட்டப் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தை அமாவாசை முன்னிட்டு சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், பணிகள் வேகமாக நடக்கவும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சாலை அமைக்கும் பணிக்கு நேரில் சென்று சிறப்பு பூஜை செய்தனர் . மத்திய அரசு நலத்திட்ட மாநில துணைத்தலைவர் ஆர்.லோகேந்திரன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.தமிழரசு, ஒன்றிய தலைவர் பி.அருள்,

ராசிபுரம் பொதுச் செயலாளர்க ராஜேந்திரன், ஏழுமலை, லட்சுமணன், மலையம்பட்டி கிளை தலைவர்கள் சுப்பிரமணி, சேகர் ஆகியோர் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையானது தயார் செய்யப்பட்டு நபார்டு திட்ட இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தனா்.

Tags:    

Similar News