ஜாக் அமைப்பு மற்றும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

திருப்பூரில் ஜாக் அமைப்பு மற்றும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.;

Update: 2024-04-10 05:59 GMT
திருப்பூரில் ஈது திருநாளாம் ரமலான் பண்டிகையை ஒட்டி ஜம்மியத்துல் அஹ்லில் குர் ஆன் அமைப்பின் சார்பில் பெருநாள் திடல் தொழுகை ரேணுகா நகர் வளாகத்தில் நடைபெற்றது.தொழுகையினை முனிபி மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வர். அப்துல் சமது ஃபிர்தவ்ஸி நடத்திவைத்தார்.இந்த திடல் தொழுகையில் குழந்தைகள்,பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து நாட்டுமக்களுக்காகவும் நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் ரமலான் பண்டிகை திடல் தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News