திருவண்ணாமலை சண்முகா கலைக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரித் தலைவர் எம். என். பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான எல். விஜய் ஆனந்த், கல்லூரிப் பொருளாளர் எ. ஸ்ரீதர், அறக்கட்டளை உறுப்பினர் எ.சாந்தகுமார், கல்விப்புல முதன்மையர் அழ. உடையப்பன், முதல்வர் கே. ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் உ. உதயகுமார் வரவேற்றார்.
சென்னை லயோலா கல்லூரியின் தரவு அறிவியல் துறைப் பேராசிரியர் அ. மணிமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பட விளக்கக் காட்சிகளுடன் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், அதன் மென்பொருள் கருவிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். இதில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.