ராமநாதபுரத்திற்கு வரும் ஓபிஎஸ்க்கு சிறப்பான வரவேற்பு: எம்பி தர்மர்

ராமநாதபுரத்திற்கு வருகை தரும் ஓபிஎஸ் அவர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என எம்பி தர்மர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-01-13 09:21 GMT

கூட்டத்தில் பேசும் எம்பி

ராமநாதபுரம் மாவட்டம் தனியார் மஹாலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் கலந்து கொண்டு பேசியதாவது: ராமநாதபுரத்தில் ஜன.20 ல் நடைபெற உள்ள அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் உரையாற்ற வருகை தரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பார்த்திபனூர், சத்திரக்குடி, ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பளிக்கப்படும்.

Advertisement

அவர் இங்கு வந்து பேசிவிட்டு திரும்பும் போது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர். அவரை தவிர வேறு யாரும் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றார்.

மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், துணை செயலாளர் நவநாதன், மாவட்ட கவுன்சிலர் கற்பகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலர் மூக்கையா, ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலர் முத்து முருகன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலர் சீனிமாரி, ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News