மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய தேர்வு

மயிலாடுதுறையைில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வீரர் வீராங்கனைகள் தேர்வு இரண்டு நாள் நடைபெறுகிறது.

Update: 2024-02-06 06:04 GMT

கபாடி போட்டி 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் ராஜீவ்காந்தி சிறப்பு விளையாட்டு சரக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு 2024-2025-ம் ஆண்டிற்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு இன்று துவங்கி நாளை வரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இம்மையத்தில் 12 வயதிலிருந்து 16 வயது வரை உள்ள இருபாலாருக்குமான தடகள விளையாட்டுக்கள், பளுதூக்குதல், கபாடி, பெண்களுக்கு மட்டுமான குத்துச்சண்டை, கூடைப்பந்து, போட்டிகளும், 10 வயதிலிருந்து 16 வயது வரை இருபாலருக்கான கபாடி, ஆண்களுக்கு மட்’டுமான கைப்பந்து ஆகிய விளையாட்டுக்கான வீரர் வீராங்கனைகள்,தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும்’ வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சியும் அவர்கள் படைக்கும் சாதனைக்கேற்ப தொடர் பயிற்சியும் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் சேருபவர்களுக்கான படிப்பு செலவு, உணவு, இருப்பிடம், விளையாட்டு உபகரணங்கள், விபத்துக்காப்பீடு என பல சலுகைகள் மத்திய அரசு மூலம் அளிக்கப்படுகிறது.

இந்த தேர்வில் கடலூர், அரியலூர்; விழுப்புரம், ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News