மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டு போட்டி

வாணாபுரம் அடுத்த அரியலுார் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-03-07 05:13 GMT

வாணாபுரம் அடுத்த அரியலுார் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது.


வாணாபுரம் அடுத்த அரியலுார் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ராமலிங்கம் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, மோகன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பலுான் ஊதுதல், படம் வரைதல் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகளும், 50 மாணவர்களுக்கு உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பன், ஆசிரியர் கார்த்திகேயன், சிறப்பு ஆசிரியர்கள் அன்னராசு, எழிலரசி, ஆரோக்கிய ஸ்டெல்லா, விமலாராணி, இயன்முறை மருத்துவர் ரேவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News