28 ஊராட்சிக்கு விளையாட்டு உபகரணம்
28 ஊராட்சிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-08 10:59 GMT
கோப்பு படம்
பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த 28 ஊராட்சிகளுக்கு, 21.60 லட்சம் ரூபாய் மதிப்பில் நேற்று, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில்,
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளுக்கு, 21.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.