திருப்பூர் மாவட்டத்தில் விளையாட்டு உபகரணங்கள் வாகன சேவை தொடக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-06-16 09:48 GMT

அமைச்சர் தொடக்கி வைப்பு

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அததுல்யா மிஸ்ரா, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரசாமி, பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்,

திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மலர்கொடி, சர்வதேச தடகள வீரர் ஒலிம்பியன் தருண் அய்யாசாமி, தேசிய தடகள வீராங்கனை பிரவீனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News