விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழாவில் மாணவிகளுக்கு பரிசு வழங்பட்டது

Update: 2024-02-22 06:12 GMT

விளையாட்டு விழா

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் விளை யாட்டு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அகிலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறையின் பேராசிரியர் இளையராஜா கலந்துகொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் செல்வி முன்னிலை வகித்தார். கல்லூரியின் இணை தேசிய மாணவர் படை அதிகாரி விஜயசாமுண்டீஸ்வரி வரவேற்றார். விளையாட்டு செயலாளர் சவுந்தர்யா உறுதிமொழி வாசிக்க, மாணவிகள் திரும்பக்கூறி உறுதி மொழியை ஏற்றனர். பல்வேறு விளையாட்டுகளில் சிறப்புத்தன்மை மிக்க மாணவிகள், ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியவாறு மைதானத்தை வலம் வந்து அதனை கல்லூரி மைதானத்தில் ஏற்றினர். விழாவையொட்டி மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில் கல்லூரியின் தேர்வுக்கட்டுப்பாட்டாளர், ஆராய்ச்சி புல முதன்மையர், கல்விப்புல முதன்மையர்கள், மாணவியர் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
Tags:    

Similar News