தொகரப்பள்ளி காப்பு காட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் புள்ளிமான் உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2024-04-23 06:07 GMT

புள்ளிமான் உயிரிழப்பு

தொகரப்பள்ளி காப்பு காட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி காப்புக்காடு பகுதியில் பெங்களூரு பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த காப்புக்காடு பகுதியில் வன உயிரினங்கள் வசித்து வரும் நிலையில் இரவு நேரங்களில் சாலையைக் கடக்கும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது இரவு நேரங்களில் வாகனங்கள் அதி வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது இதனால் வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேகத்தடை அமைத்தால் பெரும் விபத்துக்கள் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்
Tags:    

Similar News