ஸ்ரீ காவடியப்ப சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்
ஸ்ரீ காவடியப்ப சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-28 05:32 GMT
கும்பாபிஷேக விழா
வடகாடு பால்கடை ஸ்ரீ காவடியப்ப சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. அன்று மாலை கலசங்களில் கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அன்று இரவு விமான கலசம் ஸ்தாபிதம், மூலஸ்தானம் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை விநாயகர் பூஜை, கோ பூஜையை தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களால் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகஸ்தர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், காவடியப்பசுவாமி திருக்கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.