சீனிவாச பெருமாள்,ராஜாராணி சுவாமி தீர்த்தகுட ஊர்வலம்
தாரமங்கலம் அருகே சேடப்பட்டி ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ ராஜா ராணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
Update: 2024-01-24 04:41 GMT
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி ஊராட்சி சேடப்பட்டியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ ராஜா ராணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முகூர்த்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மங்கள இசையுடன், விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து பக்தர்கள் புனித நீர் ஏந்திய தீர்த்த குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்படி நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலமானது குதிரை, பசு ஊர்வலமாக செல்ல செண்டை மேளம், பம்பை மேளத்துடன் அமரகுந்தி கிராமம் மேட்டுமாரனூர் ஸ்ரீ கரியபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து இன்று மாலை மங்கல இசையுடன், விநாயகர் வழிபாட்டுடன் 108மூலிகைகளைக் கொண்டு முதற்கால யாக பூஜை நடைபெறுகிறது. பின்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா இன்று புதன்கிழமை 24ஆம் தேதி காலை இரண்டாம் கால பூஜை நடைபெற்று 9மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீ ராஜா ராணி சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தாரமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.