சீனிவாசம்பாளையம் சக்தி மாரியம்மன், மதுரை வீரன் திருவிழா
சீனிவாசம்பாளையம் சக்தி மாரியம்மன், மதுரை வீரன் திருவிழா;
By : King 24x7 Website
Update: 2024-02-24 14:13 GMT
சீனிவாசம்பாளையம் சக்தி மாரியம்மன், மதுரை வீரன் திருவிழா
திருச்செங்கோடு அடுத்த சீனிவாசம்பாளையத்தில் சக்தி மாரியம்மன், மதுரைவீரன் கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை காவிரியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தக்குடம் ஊர்வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நாளான இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் விரமிருந்த பக்தர்கள் அழகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இரவு தெருக்கூத்து நடைபெற்றது. இரண்டாம் நாள் வியாழக்கிழமை அன்று பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மி அடித்து வழிபட்டனர். அன்று இரவு நிகழ்ச்சியாக ஒரு கொடியில் இரு மலர்கள் என்ற வாழ்வியல் மேடை நாடகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.