மோடிக்கு ஆசி வழங்குவது குறித்து ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலத்தார்கள் ஆலோசனை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்ய வர உள்ள நிலையில் அவரை வரவேற்பது குறித்தும் அவருக்கு ஆசி வழங்குவது குறித்தும் ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலத்தார்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 16:15 GMT
ஸ்தலத்தார்கள் ஆலோசனை
3 நாள் பயணமாக இன்று (19-01-2024) தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
தொடர்ந்து, நாளை( 20-01-2024) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்ய வர உள்ள நிலையில் அவரை வரவேற்பது குறித்தும் அவருக்கு ஆசி வழங்குவது குறித்தும் ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலத்தார்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.