காஞ்சிபுரம் : மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் - அரசுக்கு கோரிக்கை விடுத்த மக்கள்

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Update: 2023-12-01 08:57 GMT

மழைநீர் வடிகால் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமம், துரைராஜ் நகரில், பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இங்கு, வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக, மழைநீர் பாசி பிடிக்கும் அளவிற்கு, தண்ணீரின் நிறம், பச்சையாக மாறியுள்ளது. இதில், கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, திருப்புட்குழி துரைராஜ் நகருக்கு போதிய மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட பொறியாளரை அனுப்பி எவ்வளவு நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் வசதி வேண்டும் என, ஆய்வு செய்துவிட்டு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News