ஸ்டாலினை தமிழுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்
முதல்வர் ஸ்டாலினை தமிழுக்கு அங்கீகாரம் கொடுக்கச் சொல்லவில்லை என தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
பாஜக தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், இன்று அவருடன் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சாரத்தின் தொடக்கத்தில் பெண்கள் தமிழிசை சௌந்தரராஜனை தாமரை மலர்கள் கொண்ட மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் வரவேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழ் வளர்ச்சி, உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் உள்ளிட்டவை உள்ளது மிக மகிழ்ச்சி, அதில் ஒன்றும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும். தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லும் திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அவர்கள் சொல்லி தான் தயாரித்ததாக சொல்கிறார்கள் அதில் கூட தமிழ் மொழிக்கான அங்கீகாரம் பெற்றுத் தரவில்லை. ஆனால் பாரத பிரதமர் மோடி இந்தியாவுக்கே தயாரித்துள்ள தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
அதன் மூலம் அவர் உள்ளத்தில் தமிழ் இணைந்திருப்பதை பார்க்க முடிகிறது. முதலமைச்சரின் மு க ஸ்டாலினை தமிழுக்கு அங்கீகாரம் கொடுக்க சொல்லவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விட பாஜக தேர்தல் அறிக்கை சிறந்தது காங்கிரஸ் வருடத்திற்கு ஒரு லட்சம் தருவதாக பெண்களுக்கு என்று அறிவித்துள்ளது, நாங்கள் லட்சாதிபதி ஆக்குவோம் என்று தெரிவித்துள்ளோம். 15 லட்சம் மக்களிடம் ஆலோசனை பெற்று கொடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கை இது , இது நிச்சயமாக மக்களுக்கான தேர்தல் அறிக்கை.
காங்கிரஸ் வேலை வாய்ப்பின்மை மற்றும் விலைவாசி ஏற்றத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த திட்டங்களை நிறைவேற்றினாலே இவை இரண்டும் இருக்காது, இது வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை பொறுத்துக்கொள்ளாமல் அவர்கள் பேசுகிறார்கள். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது இன்று வெளியிடப்படும்.
ரோட் ஷோ மூலம் ஒன்றை சந்திக்க முடிகிறது, ஆனால் அடுக்குமாடி குடியிருப்பை சார்ந்த சிலர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களை தனித்தனியாக சந்திக்க முடியாத காரணத்தால் ஜூம் மீட்டிங் வைத்தோம். அது தொடங்கியதும் ஆபாச படங்கள் உள்ளே போடப்பட்டது உடனே அதனை நிறுத்தி விட்டோம். இது கலாச்சார சீர்கேடு, வன்மையாக கண்டிக்கத் தக்கது என்றார்.