ஸ்டார் தொகுதி நீலகிரி; 27 பேர் வேட்பு மனு தாக்கல்!
நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. முதல் மூன்று நாட்கள், எந்த ஒரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், 25ம் தேதி பெரும் பரபரப்புக்கு இடையே பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு தாக்கல் செய்தார். நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் இன்று வரை 33 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பா.ஜ.க., வேட்பாளர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 2, பா.ஜ.க., மாற்று வேட்பாளர் அன்பரசன், அ.தி.மு.க., சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 3, மாற்று வேட்பாளர் வையாபுரி, இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா 2, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயகுமார் 2, மாற்று வேட்பாளர் கார்த்திக் 2, சாமானிய மக்கள் நலக்கட்சி வேட்பாளர் மலர்மன்னன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கணேஷமூர்த்தி, அம்பேத்கர் பார்டி ஆப் இந்தியா வேட்பாளர் ஜெயந்தி, சுயேட்சைகளாக தனபால், கிருஷ்ணகுமார், முருகன், பத்ரன், சதீஷ், செல்வன், கோபாலன், ராஜேந்திரன், முருகேசன், விஜயகுமார், குருமூர்த்தி, அன்புகுரு, கார்த்திக், மதுசூதனன், பிரபாகரன், ராஜ், காரத்திக் ஆகிய 33 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான இன்று மட்டும் 14 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.