மழை நீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம்
மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் ஆய்வு
Update: 2024-02-06 09:09 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ரஹ்மாணியபுரம் மக்காநகர் பகுதியில் புதிதாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியினை நகர்மன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் நகராட்சி பொறியாளர் அப்துல் காதர், துணை பொறியாளர் கண்ணன் மற்றும் வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.